பிள்ளையார் மிகவும் எளிமையானவர். அவரின் வழிபாடும் மிக எளிமையானதாகவே இருக்கும். சிறிய வழிபாடுகளை மகிழ்ந்து நாம் கேட்கும் வரங்களை உடனுக்குடன் கொடுக்கக்கூடியவர்.
விநாயக பெருமானை வழிப்படும்போது நாம் அனைவரும் இரண்டு கைகளை நெற்றிப் பொட்டில் குட்டிக் கொண்டு, இரண்டு காதுகளில் தோப்புகரணம் போடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளோம். அதன் பின்னணியில் இருக்கும் புராணக் கதையை அனைவரும் அறிந்திருப்போம், அதே போல் அதிலிருக்கும் சுவாரசியமான அறிவியல் ரீதியான காரணங்கள் பற்றி இங்கே தெரிந்து கொள்ளலாம்.
நாம் தலையில் கொட்டுகிற போது, நினைவலையைத் தூண்டகூடிய அமிர்த சுரப்பிகள் அவ்விடத்தில் நிறைந்து இருக்கிறது. அவ்வாறு நாம் கொட்டுகிற போது, மூளைக்குத் தேவையான அமிர்தத்தைச் சுரக்கிறது. அடுத்ததாகக் காதுகளைப் பிடித்து இழுத்து தோப்புகரணம் போடுகையில் அகங்காரம் குறைகிறது. மமகாரமும், அகங்காரமும் குறைந்து போனால், நான் என்ற ஆணவம் வற்றிப் போனால் மனிதன் மனிதத் தன்மையிலேயே நீட்டித்திருப்பார் என்பது நிதர்சனமான உண்மையாகத் திகழ்கிறது.
அப்படி, தோப்புகரணம் போடுவதை உலக மக்கள் அனைவரும் மூளைக்கான யோகா பயிற்சியாக “சூப்பர் ப்ரைன் யோகா” எனும் பெயரில் செய்து வருகின்றனர். இரண்டு காதுகளை இழுக்கும் போது மூளை சுறுசுறுப்பாக வேலை செய்கிறது. அதுமட்டுமல்லாமல், உட்கார்ந்து எழும் சமயத்தில் நம் கால்களில் இருக்கும் சோலியஸ் எனும் தசைப் பகுதி மிக அற்புத ஆற்றல்களை உடல் முழுக்க பாயச் செய்கிறது. இத்தகைய சிறப்பு பலன்களைக் கொண்ட தோப்புக்கரணத்தை தினந்தோறும் பின்பற்றி வருவதால் குழந்தைகளுக்கு நல்ல ஞாபக சக்தி உண்டாகும். எல்லோருக்கும் எல்லா விதமான நன்மைகளையும் தரக்கூடிய தோப்புகரணத்தை போட்டு விநாயக பெருமானை வழிபட்டு உடலாலும் உள்ளத்தாலும் நலம் பெறுவோம்.