பி.எஸ்.ஜி மருத்துவ அறிவியல் மற்றும் ஆராய்ச்சி மையத்தில்  நுரையீரல் மற்றும் சுவாச நோய்கள் குறித்த தேசியமாநாடு 2024 (நாப்கான் 2024) நடைபெற்றது. தேசிய நுரையீரல் மருத்துவர்கள் கல்லூரி (இந்தியா) மற்றும் இந்திய நுரையீரல் சங்கம் இணைந்து நடத்தும் இந்த மாநாட்டில் இந்தியா முழுவதும் உள்ள சுவாச மருத்துவ நிபுணர்கள் பங்கேற்கின்றனர்.

சமீப காலமாக நாள்பட்ட மூச்சுக்குழாய்நோய் பிரச்னைகள் மற்றும் ஆஸ்துமா போன்ற நாள்பட்ட சுவாசக் கோளாறுகள் அதிகரித்து வருவது பற்றிய விழிப்புணர்வை மக்களிடம் ஏற்படுத்தும் வகையிலும், ஆரோக்கியமான வாழ்க்கை முறைமாற்றங்கள் மூலம் அவற்றைதடுப்பது குறித்தும், அதனால் பாதிக்கப்பட்டவர்கள் அதை கட்டுப்பாட்டிற்குள் வைத்திருப்பது குறித்தும், சுவாசநோய் தொடர்பான சிகிச்சையில் ஏற்பட்டுள்ள தற்போதைய நவீன முன்னேற்றங்கள் குறித்தும் இந்த மாநாட்டில் விவாதிக்கப்பட்டது.

இந்த மாநாட்டை சிறப்பு விருந்தினர், நுரையீரல் மருத்துவ டாக்டர் பேராசிரியர் அதுல்சி. மேத்தா துவக்கி வைத்தார். மருத்துவர்கள் உட்பட இந்தியா மற்றும் வெளிநாடுகளில் இருந்து  2,200க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். நாப்கான் 2024 மாநாட்டு ஒருங்கிணைப்பு தலைவர் டாக்டர் மோகன்குமார், செயலளார் கார்த்திகேயன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.