ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை பக்கவாத சிகிச்சை குறித்த மருத்துவ கல்வி நிகழ்வை சமீபத்தில் நடத்தியது. இதில், விரிவான பக்கவாத சிகிச்சை குறித்து ஆலோசிக்கப்பட்டது.

எஸ்.என். ஆர் சன்ஸ் அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் டி. லட்சுமிநாராயணசுவாமி இணை நிர்வாக அறங்காவலர், ஆர். சுந்தர் ஆகியோர் இக்கூட்டத்தைத் துவக்கி வைத்தனர்.

மேலும், ராமகிருஷ்ணா மருத்துவர்கள் பங்கேற்று விரிவான பக்கவாத சிகிச்சை குறித்து விவரித்தனர். தீவிர பக்கவாதம், பக்கவாதத்திற்குப் பிந்தைய மறுவாழ்வு மற்றும்  நோயாளியை மையமாகக் கொண்ட பக்கவாதம் பராமரிப்பு சிகிச்சை ஆகியவற்றில் மேம்பட்ட மருத்துவ மையமாக சிறப்பு அங்கீகாரத்தைப் பெற்றுள்ளது. இந்நிகழ்ச்சியில், கோயம்புத்தூர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த மருத்துவர்கள் மற்றும் மருத்துவத் துறையினர் பங்கேற்றனர்.