ஜி.கே.என்.எம். மருத்துவமனையில் பிரத்யேக நுரையீரல் உயர் ரத்த அழுத்த கிளினிக் துவக்கப்பட்டுள்ளது.
நிகழ்வில், மருத்துவமனையின் நிர்வாக மருத்துவ இயக்குனர் மருத்துவர் சந்தோஷ் குமார், இதய செயலிழப்பு கிளினிக் & எக்கோ கார்டியோகிராபி தலைமை ஆலோசகர் டாக்டர். ஆர். சண்முகசுந்தரம், தலைமை நிர்வாக அதிகாரி டாக்டர் ரகுபதி வேலுசாமி, இருதயநோய் நிபுணர் டாக்டர் கே.ஏ. சாம்பசிவம், மருத்துவ இயக்குநர் – செயல்பாடுகள் மருத்துவர் சந்தோஷ் ஆகியோர் தலைமை வகித்து கிளினிக்கை துவக்கி வைத்தனர்.
நுரையீரல் உயர் ரத்த அழுத்தத்தால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு மேம்பட்ட நோய் கண்டறிதல் மற்றும் சிகிச்சையை வழங்குவதற்கான மேம்பட்ட நுரையீரல் உயர் ரத்த அழுத்த கிளினிக் துவக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.