ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகம் வெளியிட்ட முதல் இரண்டு சதவீத விஞ்ஞானிகளின் பட்டியலில் இந்துஸ்தான் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியின் இரண்டு பேராசிரியர்கள் இடம்பெற்றுள்ளனர்.
ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகம் மற்றும் எல்சேவியர் 22 முக்கிய அறிவியல் துறைகள் மற்றும் 174 துணைத் துறைகளில் ஸ்கோப்பஸ் தரவுத்தளத்தின் மூலம் சர்வதேச அறிவியல் சமூகத்தால் அங்கீகரிக்கப்பட்ட ஆராய்ச்சியாளர்களால் மேற்கொள்ளப்பட்ட ஆராய்ச்சியின் அடிப்படையில் முதல் இரண்டு சதவீத விஞ்ஞானிகளின் பட்டியலை வெளியிட்டுள்ளனர்.
உலகம் முழுவதும் உள்ள அனைத்து துறைகளில் உள்ள 2,23,252 விஞ்ஞானிகளில், இந்தியாவில் 5,352 பேர் உள்ளனர். அவற்றில், கோவை இந்துஸ்தான் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியின் சிவில் இன்ஜினியரிங் பேராசிரியர் கருணாநிதி மற்றும் மெக்கானிக்கல் இன்ஜினியரிங் பேராசிரியர் மோகன்ராஜ் ஆகிய இரு ஆசிரியர்கள் உலகின் முதல் இரண்டு சதவீத விஞ்ஞானிகளின் பட்டியலில் இருந்தனர்.
சாதனை படைத்த இரு ஆசிரியர்களையும் கல்வி நிறுவனத்தின் செயலர் சரஸ்வதி கண்ணையன், இணைச் செயலர் பிரியா, தலைமை நிர்வாக அதிகாரி கருணாகரன், முதல்வர்கள் ஜெயா, பொன்னுசாமி ஆகியோர் பாராட்டினர்.