கவுண்டம்பாளையம் சட்டமன்றத் தொகுதியில் பொதுமக்களிடையே செயற்கை நுண்ணறிவு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில், சரவணம்பட்டி வார்டில் ‘கற்க ஏஐ’ திட்டத்தை சட்டமன்ற உறுப்பினர் கனிமொழி சந்தோஷ் தொடங்கி வைத்தார்.

செய்தியாளர்கள் சந்திப்பில் இதுகுறித்து கனிமொழி சந்தோஷ் எம்.எல்.ஏ. கூறுகையில், எதிர்காலத்தில் செயற்கை நுண்ணறிவு மிக முக்கியமான இடத்தைப் பெறும் என அனைவரும் தெரிவித்து வருகின்றனர். வேலைவாய்ப்புகளைப் பெறுவதற்கும், வாழ்க்கை முறையை மேம்படுத்துவதற்கும் ஏஐ தொழில்நுட்பம் உதவியாக இருக்கும்.

3b 7 scaled

எனவே, கவுண்டம்பாளையம் தொகுதி முழுவதும் அனைத்து பகுதிகளிலும்
ஏஐ குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட வேண்டும். அந்த நோக்கில் இந்த முன்னெடுப்பு தொடங்கப்பட்டுள்ளது என்றார்.

தனுஷ் தொடர்பாக பெண் நிர்வாகிகள் சந்திப்பது குறித்த செய்தியாளர்களின் கேள்விக்குப் பதிலளித்த அவர், ஜனநாயக நாட்டில் யார் வேண்டுமானாலும் அரசியல் ரீதியாகச் சந்திக்கலாம். தமிழக வெற்றிக் கழகம் அனைவரையும் வரவேற்கிறது. அரசியலில் ஆரோக்கியமான விவாதங்களும், ஆரோக்கியமான போட்டியும் இருக்க வேண்டும் என்று தெரிவித்தார்.

மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் பிரச்சினைகளை விரைந்து சரிசெய்வது குறித்த கேள்விக்குப் பதிலளித்த கனிமொழி, மக்கள் தங்களுடைய பிரச்சினைகளைத் தெரிவிப்பதற்கான வாய்ப்புகள் அதிகரித்துள்ளன. பொதுமக்களின் குறைகளை விரைவாகக் கண்டறிந்து, அவற்றுக்குத் தீர்வு காணும் வகையில் நமது தமிழக வெற்றிக் கழக அரசு செயல்பட்டு வருகிறது.

பாதிக்கப்பட்ட பகுதிகளின் நிலவரங்கள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு, அங்குள்ள பிரச்சினைகள் மற்றும் அவற்றின் தற்போதைய நிலை குறித்த அறிக்கைகள் முதல்வருக்கு அனுப்பப்பட்டு வருகின்றன.

கடந்த ஆட்சிக் காலத்தில் நீண்ட காலமாகத் தாமதமடைந்த பணிகளைக்கூட விரைந்து முடிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்று தெரிவித்தார்.