ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த ஐங்கரன் (47) ரத்த அழுத்தம் அதிகமாகி மூளையில் ரத்தக் கசிவு ஏற்பட்டு மூளைச்சாவு அடைந்தார்.
இதனையடுத்து, ஐங்கரன் பெற்றோர்கள் அவரது உடல் உறுப்புகளை தானம் செய்ய முன்வந்தார்கள். தமிழ்நாடு உறுப்பு தான ஆணையத்தின் அனுமதியுடன் அவரது சிறுநீரகங்கள், கண்கள் மற்றும் தோல் ஆகியவை தானமாகப் பெறப்பட்டது. சிறுநீரகங்கள்,கே.எம்.சி.ஹெச். மருத்துவமனைக்கும், கண்கள் மற்றும் தோல் கோவையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கும், வழங்கப்பட்டது.
இது குறித்து கே.எம்.சி.ஹெச். மருத்துவமனை தலைவர் Dr.நல்ல ஜி பழனிசாமி கூறுகையில்,‘மக்களிடையே உடல் உறுப்பு தானம் குறித்து அதிக விழிப்புணர்வு தேவைப்படுகிறது. ஒருவர் இறந்த பிறகு அவரது உடல் உறுப்புகள் தானமாக வழங்கப்பட்டால் அது பலரது உயிரைக் காப்பாற்ற உதவும். உடல் உறுப்பு தானம் வழங்கிய ஐங்கரன் குடும்பத்திற்கு எனது நன்றி’ எனத் தெரிவித்தார்.