கோவை, அஜ்ஜனூரில் உள்ள பாரதிய வித்யா பவன் பப்ளிக் பள்ளியில் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட்டது. பள்ளியின் முதல்வர் வித்யாசங்கர், விநாயகருக்கு சிறப்பு பூஜை செய்து, விழாவினைத் துவக்கி வைத்தார். தொடர்ந்து கலைநிகழ்ச்சி, பரதநாட்டியம் நடைபெற்றது. விநாயகப் பெருமானுடன் பேசுவது போன்ற கற்பனை உரையாடல் நாடகம் இடம்பெற்றது. தொடர்ந்து விநாயகர் சிலை ஊர்வலம் நடைபெற்றது.

