கற்பகம் மருத்துவக் கல்லூரியின் துணை சுகாதார அறிவியல் துறை சார்பில் இரண்டாம் ஆண்டு பட்டமளிப்பு விழா நடைபெற்றது.

விழாவிற்கு கற்பகம் கல்வி நிறுவனங்களின் தலைவர் வசந்தகுமார் முன்னிலை வகித்தார். கற்பகம் மருத்துவக்கல்லூரி முதல்வர் சாந்தா அருள்மொழி தலைமை தாங்கினார்.

சிறப்பு விருந்தினராக லோட்டஸ் மருத்துவமனை குழுமத் தலைமை நிர்வாக அலுவலர் மருத்துவர் செல்வன் கலந்துகொண்டு, 130 மாணவ, மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கினார்.

அவர் பேசுகையில்: சுகாதாரத் துறையில் தொழில்முறை திறன், மனிதநேயம் மற்றும் அர்ப்பணிப்பு ஆகியவை மிக முக்கியமானவை. மாணவர்கள் தங்களது சேவையின் மூலம் சமூக நலனில் சிறப்பான பங்களிப்பை வழங்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.

நிகழ்ச்சியில் கற்பகம் கல்வி நிறுவனங்களின் முதன்மை செயல் அதிகாரி முருகையா, துணை சுகாதார அறிவியல் துறை முதல்வர் நிர்மலாதேவி, மருத்துவ இயக்குனர் மருத்துவர் வெங்கடேசன், கற்பகம் மருத்துவ கல்லூரியின் துறை தலைவர்கள், மருத்துவர்கள், பேராசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.