இந்தியன் அகாடமி ஆஃப் பீடியாட்ரிக்ஸ் கோவை கிளை, பி.எஸ்.ஜி.மருத்துவக் கல்லூரியின் குழந்தைகள் நலத்துறையுடன் இணைந்து தேசிய அடிப்படை உயிர்காக்கும் உதவி மற்றும் இதய நுரையீரல் மீட்பு (சி.பி.ஆர்) தினத்தை முன்னிட்டு 1,200 மாணவர்களுக்கு  சி.பி.ஆர் பயிற்சி அளிக்கப்பட்டது.

psg cpr 3 scaled

அவசரகாலங்களில் உயிர்களைக் காப்பாற்றும் அடிப்படை முதலுதவி மற்றும் சி.பி.ஆர் செய்முறை பயிற்சிகளை மாணவர்களுக்கு,  மருத்துவ நிபுணர்கள் விளக்கி, நேரடி செயல்முறை பயிற்சியும் வழங்கினர்.

நிகழ்வில் பி.எஸ்.ஜி.மருத்துவக் கல்லூரியின் முதல்வர் டாக்டர் சுப்பாராவ், குழந்தைகள் நலத்துறைத் தலைவர் டாக்டர் ஜெயவர்த்தனா, மருத்துவக் கல்லூரியின் மருத்துவக் கண்காணிப்பாளர் டாக்டர் கார்த்திகேயன்,

psg cpr 2 scaled

இந்தியன் அகாடமி ஆஃப் பீடியாட்ரிக்ஸ் தமிழ்நாடு மாநில முன்னாள் தலைவர் டாக்டர் ராஜேந்திரன் ஆகியோர் பங்கேற்றனர்.