ரெடிங்டன் அறக்கட்டளையின் இரண்டாவது ஆண்டு தன்னார்வ ரத்ததான முகாம், ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையில் நடைபெற்றது. சிறப்பு விருந்தினராக மருத்துவமனையின் மருத்துவக் கண்காணிப்பாளர் டாக்டர் அழகப்பன் பங்கேற்றார்.
நிகழ்ச்சியில் எஸ்.என்.ஆர். சன்ஸ் அறக்கட்டளையின் இணை நிர்வாக அறங்காவலர் நரேந்திரன் கலந்து கொண்டு, தன்னார்வ ரத்ததானம் போன்ற சமூக நல முயற்சிகளை தொடர்ந்து முன்னெடுத்து வரும் ரெடிங்டன் அறக்கட்டளையின் சேவையை பாராட்டினார்.
எஸ்.என்.ஆர். சன்ஸ் அறக்கட்டளையின் தலைமை நிர்வாக அதிகாரி ராம்குமார், அறுவை சிகிச்சை, புற்றுநோய் சிகிச்சை, உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை மற்றும் மகப்பேறு உள்ளிட்ட பல்வேறு மருத்துவ தேவைகளுக்கு போதுமான அளவில் ரத்தம் இருப்பது அவசியம் என வலியுறுத்தினார்.
மருத்துவமனையின் ரத்தப் புற்றுநோய் மற்றும் ரத்தவியல் நிபுணர் டாக்டர் ஸ்ரீதர் கோபால், ஒரு யூனிட் ரத்தம் பல உயிர்களைக் காப்பாற்றும் என்பதையும், அனைவரும் தொடர்ந்து தன்னார்வ ரத்ததானம் செய்ய முன்வர வேண்டும் என்பதையும் வலியுறுத்தினார்.
நிகழ்ச்சியில் ஸ்வர்கம் அறக்கட்டளையின் நிறுவனர் சுவர்ணலதா, இணையவழி மூலம் ரெடிங்டன் இந்தியாவின் தலைமை செயல் அலுவலர் ராஜத் வோரா, உலகளாவிய நிலைத்தன்மைத் துறை தலைமை அதிகாரி வெங்கடேஷ், ரெடிங்டன் அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் சீதா துருவா ஆகியோர் கலந்து கொண்டனர்.
