இந்துஸ்தான் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, இந்திய வர்த்தக மற்றும் தொழில் சபைகளின் கூட்டமைப்பு  சார்பில் நடைபெற்ற 18வது தேசிய கல்வித் தலைமைத்துவம் மற்றும் திறன் மேம்பாட்டு உச்சி மாநாடு மற்றும் சிறப்புத் திறன் விருதுகள்-2026 நிகழ்வில், “இன்ஸ்டிடியூட் ஆஃப் தி இயர் – லிபரல் ஆர்ட்ஸ் அண்ட் ஹியூமனிடிஸ்” என்ற தேசிய விருதைப் பெற்றுள்ளது.

விருது வழங்கும் விழா கடந்த ஜூலை 9ம் தேதி நியூடெல்லியில் உள்ள லீ மெரிடியன் ஹோட்டலில் நடைபெற்றது. இந்துஸ்தான் கல்வி நிறுவனங்களின் நிர்வாக அறங்காவலர் சரஸ்வதி, செயலர் பிரியா ஆகியோர் விருதைப் பெற்றனர்.

தாராளக் கலை மற்றும் மனிதநேயக் கல்வித் துறையில் உயர்தர கல்வி, ஆராய்ச்சி மற்றும் புதுமை, திறன் மேம்பாடு, மாணவர் மையக் கற்றல், தொழில்துறை இணைப்பு மற்றும் சமூகப் பொறுப்புணர்வுடன் கூடிய உயர்கல்வி வழங்கி வரும் சிறப்பை அங்கீகரிக்கும் வகையில் இந்த விருது வழங்கப்பட்டது.

விழாவில் மாநிலங்களவை உறுப்பினரும், பாஜக தேசிய துணைத் தலைவருமான லக்ஷ்மிகாந்த் பாஜ்பாய் தலைமை விருந்தினராக கலந்து கொண்டு, “விக்சித் பாரத் 2047” என்ற வளர்ச்சி இலக்கை எட்டுவதில் கல்வியின் பங்கு குறித்து சிறப்புரையாற்றினார். தேசிய கல்விக் கொள்கை அறிவு, திறன், புதுமை, தொழில்நுட்பம், தொழில்முனைவு மற்றும் தேசியப் பொறுப்புணர்வை ஒருங்கிணைக்கும் எதிர்கால இந்தியாவின் வழிகாட்டும் ஆவணமாக திகழ்கிறது என்றும் அவர் குறிப்பிட்டார்.

மோக்ஷாயதன் யோக் நிறுவனர் பாரத் பூஷண் விருதுகளை வழங்கினார். கூட்டமைப்பின் தேசிய கல்விக் குழுத் தலைவரும், ஷோபித் பல்கலைக்கழகத்தின் வேந்தருமான குன்வர் சேகர் விஜேந்திரா தொடக்க உரையாற்றி, இந்திய உயர்கல்வித் துறையில் திறன் சார்ந்த கல்வி, புதுமை மற்றும் மாற்றங்களின் அவசியத்தை எடுத்துரைத்தார்