கோவையில் நடைபெற்று வரும் அரசு பொருட்காட்சியில், சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. கோவை ஸ்ரீ நேரு வித்யாலயா மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியின் குட்டி காப்ஸ் குழுவினர் பங்கேற்று, சாலை பாதுகாப்பின் அவசியத்தை வலியுறுத்தும் பல்வேறு நிகழ்ச்சிகளை வழங்கினர்.
மேலும், கங்கா கல்லூரி ஆஃப் அலைட் சயின்சஸ் மற்றும் ஸ்ரீ கிருஷ்ணா ஆதித்யா கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளின் உயிர் அமைப்பு மாணவர்களும் நிகழ்ச்சியில் பங்கேற்று, சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
