என்ஏசி ஜுவெல்லர்ஸ் நிறுவனத்தின் நவீன ஆபரணப் பிராண்டான ஸ்டைலோரி, கோவை ஆர்.எஸ். புரத்தில் முதல் விற்பனை நிலையத்தை வியாழக்கிழமை துவக்கியுள்ளது. இங்கு வெள்ளி ஆபரணங்கள், ஆய்வக வைரங்கள் மற்றும் 9 காரட் தங்க ஆபரணங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இதனை நடிகை சஞ்சனா திறந்து வைத்தார்.

இதுகுறித்து ஸ்டைலோரி நிறுவனத்தின் நிறுவனர் ஆனந்த ராமானுஜம் கூறியதாவது: சான்றளிக்கப்பட்ட வெள்ளி, ஆய்வக வைரங்கள் மற்றும் 9 காரட் தங்க ஆபரணங்களை ஒரே இடத்தில் வழங்குவதன் மூலம், வடிவமைப்பு, தரம் மற்றும் வெளிப்படைத்தன்மையை ஒருங்கிணைக்கும் புதிய அனுபவத்தை வாடிக்கையாளர்களுக்கு வழங்குகிறோம் என்றார்.
என்ஏசி ஜுவெல்லர்ஸ் தலைவர் அனந்த பத்மநாபன் கூறுகையில்: 1917-ஆம் ஆண்டு முதல் நம்பிக்கையையும் கைவினைத்திறனையும் அடிப்படையாகக் கொண்டு இயங்கி வரும் என்ஏசி ஜுவெல்லர்ஸின் பாரம்பரியத்தின் அடுத்த கட்டமாக ஸ்டைலோரி உருவாகியுள்ளது என்றார்.

சமூகப் பொறுப்புணர்வின் ஒரு பகுதியாக, கோவை ஹோம் அமைப்பின் மூலம் கல்வியில் சிறந்து விளங்கும் 15 மாணவர்களின் பள்ளிக் கட்டணத்திற்காக ரூ.5 லட்சம் நிதியுதவியை ஸ்டைலோரி அறிவித்தது. மேலும், அறிமுகக் கால சலுகையாக ஒவ்வொரு கொள்முதலுக்கும் இலவச தங்க நாணயம் வழங்கப்படுவதுடன், கடைக்கு வருகை தரும் அனைவருக்கும் ரூ.1 லட்சம் மதிப்பிலான ஆபரணங்களை வெல்லும் வாய்ப்பும் வழங்கப்படுவதாக நிறுவனம் தெரிவித்துள்ளது.
