கே.பி.ஆர் கலை அறிவியல் மற்றும் ஆராய்ச்சிக் கல்லூரியில் முதலாமாண்டு அறிவியல் பிரிவு மாணவர்களுக்கு வரவேற்பு விழா நடைபெற்றது.

கே.பி.ஆர் கல்விக் குழுமங்களின் தலைவர் கே.பி. ராமசாமி தலைமை வகித்தார். கல்லூரியின் செயலர் காயத்ரி அனந்தகிருஷ்ணன், கல்லூரியின் முதல்வர் கீதா,

சிறப்பு விருந்தினராக முன்னாள் காவல்துறைக் கண்காணிப்பாளரும், தன்னம்பிக்கைப் பேச்சாளருமான கலியமூர்த்தி கலந்து கொண்டு பேசுகையில்: கல்லூரியினைத் தேர்வு செய்வது என்பது எதிர்கால வாழ்வியலைத் தேர்வு செய்வதாகும். அந்த வகையில் கே.பி.ஆர் கலை அறிவியல் கல்லூரி மாணவர்களின் எதிர்கால நலனை மட்டுமே கருத்தில் கொண்டு இயங்கி வருகிறது.

cover a1 1 scaled

மாணவர்கள் வாய்ப்பினைச் சரிவரப் பயன்படுத்தி சாதனையாளர்களாகத் தங்களை உருவாக்கிக் கொள்ள வேண்டும். இளைஞர்கள் தங்களது கனவினை நோக்கிப் பயணிப்பதில் இதுபோன்ற கல்வி நிலையங்களின் பங்களிப்பு அளப்பரியது எனப் பேசினார்.

தொடர்ந்து பன்னிரண்டாம் வகுப்பில் அதிக சதவீதத்துடன் தேர்ச்சி பெற்ற மாணவர்கள், விளையாட்டுத் துறையில் தேசிய அளவில் முன்னிலை வகித்த 204 மாணவர்களுக்கு ரூ.2 கோடி மதிப்பிலான கல்வி உதவித் தொகையுடன் பயிலும் வாய்ப்பு வழங்கப்பட்டது.