ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியின் மின்னியல் மற்றும் மின்னணுவியல் பொறியியல் துறை மற்றும் ஜெயம் ஆட்டோமோட்டிவ்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.

ஜெயம் ஆட்டோமோட்டிவ்ஸ் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் ஆனந்த், எஸ்.என்.ஆர் சன்ஸ் அறக்கட்டளை நிறுவனத்தின் நிர்வாக அறங்காவலர் சுந்தர் ராமகிருஷ்ணன் ஒப்பந்தத்தை பரிமாறிக் கொண்டனர். நிகழ்வில் இணை நிர்வாக அறங்காவலர் நரேந்திரன், தலைமை நிர்வாக அதிகாரி
ராம்குமார், முதல்வர் டேவிட் ரத்னராஜ், தொழில்துறை பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

இந்த ஒப்பந்தம் மாணவர்களுக்கு மதிப்புமிக்க கற்றல் வாய்ப்புகளை உருவாக்கி, வேலைவாய்ப்பு திறனை மேம்படுத்தும்.