வேட்டியை வைத்து ஒரு வெள்ளை புரட்சி செய்த தமிழர்களின் பாரம்பரிய உடை தயாரிப்பு நிறுவனமான ‘ராம்ராஜ் காட்டன்’ இன்று அதன் புதிய கிளையை கோவை காந்திபுரம் கிராஸ் கட் சாலையில் திறந்தது.

vemgersகிராஸ் கட் சாலை, பவிழம் ஜூவல்லரி அருகே அமைந்துள்ள இந்த புதிய கிளையை செல்வா கோல்ட் கவரிங் உரிமையாளர் செல்வராஜ், விருந்தினர்கள் மற்றும் நிறுவன ஊழியர்கள் முன்னிலையில் திறந்து வைத்தார்.

இந்த நிகழ்வில் சிறப்பு அழைப்பாளர்களாக ராயல் கேர் மருத்துவமனையை சேர்ந்த டாக்டர் செந்தில்குமார், தன்னம்பிக்கை பேச்சாளர் இளமுருகன், வாசவி மருத்துவமனையை சேர்ந்த டாக்டர் ரபிந்திரநாத், நில உரிமையாளர்கள் வெங்கடேஷ் மற்றும் சங்கீதா ஆகியோர் கலந்து கொண்டனர்.

uselviஇவர்கள் அனைவரும் இணைந்து வியாபார துவக்கத்தை ஆரம்பித்து வைத்தனர். அதன் பின்னர் சங்கீதா மற்றும் வெங்கடேஷ் இந்த புது கிளையில் முதலாவதாக ராமராஜ் தயாரிப்புகளை வாங்கினர். அவர்களிடமிருந்து முதல் விற்பனை தொகையை டாக்டர் செந்தில்குமார் மற்றும் நந்தினி செந்தில்குமார் பெற்று நிறுவனத்தில் செலுத்தி முதல் விற்பனை நிகழ்வை நிறைவு செய்தனர்.

kechi

காட்டன் கைக்குட்டை, டவல்களில் துவங்கி குழந்தைகளுக்கான பாரம்பரிய வேட்டி சட்டைகள், பெரியவர்களுக்கான பலவகை வேஷ்டிகள், ஆண்களுக்கான திருமண உடைகள், மூங்கில் பருத்தி வெள்ளை சட்டைகள் என பலவகையான உடைகள் இங்கு விற்பனைக்கு இடம் பெற்றுள்ளது.

wtinkc

senwav

cooorge

mircl

bambooct