தேசிய ஜனநாயக கூட்டணிக் கட்சி வேட்பாளரும், பா.ஜ.க தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ கோவை வடக்கு தொகுதிக்கு உட்பட்ட சங்கனூர் சாலையில் உள்ள வீர சக்தி அம்மன் கோவிலில் இன்று காலை சாமி தரிசனம் செய்து பிரச்சாரத்தை துவங்கினார்.

நேதாஜி நகர், நல்லாம்பாளையம், ரூட் கம்பெனி மேம்பாலம், சாஸ்திரி ரோடு இரட்டை பைப் மைதானம் மற்றும் சங்கனூர் பகுதிகளில் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.

20260419 144816

இந்நிலையில் சாஸ்திரி ரோடு ரத்தினபுரி, ரெட்டை பைப் மைதானத்தில் திரண்டு இருந்த தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி தொண்டர்கள் மத்தியில் உரையாற்றிய அவர் பேசும்போது;

தி.மு.க ஆட்சியை வீட்டிற்கு அனுப்ப வேண்டும் என்றால், மாற்றாக இருக்கக் கூடிய ஒரே ஒரு கூட்டணி அ.தி.மு.க தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி மட்டும் தான்.

எல்லாருக்கும் தெரியும், தி.மு.க ஆட்சி வந்தால், பெண் குழந்தைகளை வெளியில் அனுப்ப முடியாது. போதையில் யார் ? எந்த நேரத்தில் எங்கு ? இருப்பார்கள் என்பது தெரியவில்லை, சின்ன, சின்ன குழந்தைகள் எல்லாம் போதைக்கு மாறி கொண்டு உள்ளதாகவும் நாம் ஒட்டுமொத்த வருங்காலமே, வீணாக போய்விடும்.

அதனால் இன்று தமிழகத்தில் இருக்கக் கூடிய மிக முக்கியமான பிரச்சனை என்பது பெண்களுடைய பாதுகாப்பும் மற்றும் போதை பொருள் பிரச்சனை. இதற்கு மாற்றாக ஒரு அரசு அமைய வேண்டும் என்றால், வேறு ஏதாவது மாற்றுக் கட்சிக்கு வாக்கு அளித்தால், வாக்கு வீணாக போய்விடும்.

ஏமாந்து விடாதீர்கள், அதை முதலில் புரிந்து கொள்ள வேண்டும். நமது குழந்தைகள் உணர்ச்சி பொங்க மாற்றம், மாற்றம் என்கின்றார்கள். மாற்றம் கொடுக்க வேண்டிய ஒரு சூழலில் மாற்றத்தை தரக் கூடிய வாய்ப்பு இருக்கின்ற ஒரே வாய்ப்பு தேசிய ஜனநாயக கூட்டணிக்கு மட்டும் தான் இருக்கிறது.

அதைப் புரிந்து கொண்டு நாம் செயல்படுத்த வேண்டும். எடப்பாடி பழனிச்சாமி ஆட்சியில் என்னென்ன திட்டங்கள் எல்லாம் கொடுக்கப் போகிறோம் என்று அவர் தேர்தல் வாக்குறுதியில் அனைத்து பக்கமும் கொடுத்து உள்ளார்.

கரூர்காரர் பட்டி போட பார்க்கிறார். விடலாமா ?வேண்டாமா ? என்று கேள்வி எழுப்பி அவர், விடக் கூடாது அதனால் ஸ்டாலின் அவர்கள் ஊழல் கரை படிந்த முன்னாள் அமைச்சரை அனுப்பி இருக்கிறார் என்றால், ஸ்டாலினுக்கு எவ்வளவு வெறுப்பு இருக்கிறது.

கோவையில் 10 / 10 க்கு எஸ்.பி வேலுமணி ஜெயித்தார் என்பதற்காக, கரூரில் இருந்து கிரிமினல்கள் கொண்டு வந்து நிறுத்துவாரா ? அதற்கு சரியான பதிலடி தி.மு.க விற்கு கொடுத்தாக வேண்டும். கடந்த முறை பத்துக்கு, பத்து இந்த முறை அவிநாசி தனித் தொகுதியும் சேர்த்து 11 க்கு 11 ஜெயித்து காண்பிக்க வேண்டும்.

வடக்கு சட்டமன்ற தொகுதியிலே தாமரை சின்னத்தில் வாக்களியுங்கள். உங்கள் சகோதரியாக, உங்கள் வீட்டு மகளாக, உங்களுக்கு உழைப்பதற்கு இந்த வாய்ப்பினை கொடுங்கள். மக்களுடைய சேவைகளுக்கு குரல் கொடுக்க எனக்கு ஒரு வாய்ப்பு கொடுங்கள், தாமரை சின்னத்தில் வாக்கு அளிங்கள் என்று வாக்கு சேகரித்தார்.