கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதியின் திமுக வேட்பாளர் கவிதா கல்யாண சுந்தரம் தொகுதிக்கு உட்பட்ட மலையடிவார கிராமங்களான தேரம்பாளையம், மொங்கம்பாளையம், மொள்ளேபாளையம், குரும்பபாளையம், பெள்ளாதி, பெரிய தொட்டிபாளையம், வெள்ளிப்பாளையம், சகரட்டுமேடு, கருப்பராயன் குட்டை உள்ளிட்ட சுமார் 20க்கும் மேற்பட்ட இடங்களுக்கு சென்று தீவிர பிரச்சாரம் மேற்கொண்டார்..

மல்லிகை பூ தோட்டத்தில் வேலை செய்து கொண்டிருந்த கூலித் தொழிலாளி பெண்களிடம் வாக்கு சேகரித்தார்.

அப்பொழுது அவர், பெண் வேட்பாளராக போட்டியிடும் தனக்கு வாக்களித்து வெற்றி பெற செய்ய வேண்டும் என கோரினார். ஒரு பெண்ணின் கஷ்டம் ஒரு பெண்ணிற்கு தான் தெரியும். என்னை மேட்டுப்பாளையம் தொகுதி சட்டமன்ற உறுப்பினராக தேர்வு செய்தால் கிராமப்புறங்களில் கழிப்பிட வசதி, குடிநீர் வசதி, கழிவுநீர் கால்வாய்கள், சாலை வசதி, வீடு இல்லாதவர்களுக்கு சொந்த வீடு உள்ளிட்ட பல்வேறு அடிப்படை வசதிகளை செய்து தருவதாக வாக்குறுதி அளித்தார்.