சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதியில் தேசிய ஜனநாயக கூட்டணியின் தேர்தல் அலுவலகம் இன்று திறக்கப்பட்டது.

வேட்பாளர் கே.ஆர்.ஜெயராம் முன்னிலையில் அதிமுக மாணவர் அணி மாநில செயலாளர் சிங்கை இராமச்சந்திரன் திறந்து வைத்தார்.

அலுவலகத்தில் அதிமுகவின் நிறுவனர் மற்றும் முன்னாள் தமிழக முதலமைச்சர் எம்.ஜி.ஆர்., அக்கட்சியின் முன்னாள் பொதுச்செயலாளர் மற்றும் முன்னாள் தமிழக முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதா மற்றும் பா.ஜ.க.வின் மூத்த தலைவர் மற்றும் முன்னாள் இந்தியப் பிரதமர் வாஜ்பாய் ஆகியோரின் படங்களுக்கு மரியாதை செலுத்தப்பட்டது.