நிர்மலா மகளிர் கல்லூரியின் தமிழ்த்துறை சார்பில் பொழிவும் இதழ் வெளியீடு நிகழ்ச்சி நடைபெற்றது. புலியகுளம், அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் தமிழ்த்துறைத் தலைவர் புவனேஸ்வரி சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார்.

‘நிர்மலா நந்தவனம்’ என்ற வருடாந்திர மாணவியர் படைப்பினை உள்ளடக்கமாகக் கொண்ட இதழ் வெளியிடப்பட்டது. கல்லூரியின் துணை முதல்வர் ஜாக்குலின் மேரி வெளியிட, சிறப்பு விருந்தினர் புவனேஸ்வரி பெற்றுக் கொண்டார்.