கோவை, டவுன்ஹால் வைசியால் வீதியில் அரோமா பேக்கரியின் புதுப்பிக்கப்பட்ட கிளை திறப்பு விழா வியாழக்கிழமை கோலாகலமாக நடைபெற்றது.

கோவையில் கேக், ஸ்நாக்ஸ், ஸ்வீட்ஸ், பால் பொருட்களுக்கு, தனக்கென தனி முத்திரையை அரோமா பேக்கரி பதித்து வருகிறது. நகரின் பல பகுதிகளில் கிளைகளை உருவாக்கி வாடிக்கையாளர்களிடையே தொடர் ஆதரவையும், நன்மதிப்பையும் பெற்று வருகிறது.

அந்த வகையில், வைசியால் வீதியில் அரோமா பேக்கரியின் புதுப்பிக்கப்பட்ட கிளை திறப்பு விழா நிர்வாக இயக்குனர் பொன்னுசாமி தலைமையில் நடைபெற்றது. துவக்க விழாவில் சுப்புலட்சுமி பொன்னுசாமி, செயல் இயக்குனர்கள் விஜயவேல், விஜயலட்சுமி, விமலாதேவி, பணியாளர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இந்த கிளையில் க்ரீம் கேக் வகைகள், ஸ்வீட்ஸ், கார வகைகள், பால் பொருட்கள் என அரோமா பேக்கரியின் அனைத்து ஸ்நாக்ஸ் வகைகளும் உள்ளன.
