கோவை லேடீஸ் சர்க்கிள் 85 சார்பில், காளப்பட்டி அரசு பள்ளியில் ஸ்மார்ட் வகுப்பறை தொடங்கப்பட்டது

இதன் மூலம் 400-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயனடைந்தனர். இணையவழி காட்சிப் பொருட்கள் மற்றும் டிஜிட்டல் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி கல்வியை நவீனப்படுத்துவதில் ஸ்மார்ட் வகுப்பறைகள் முக்கிய பங்கு வகிக்கின்றன. இவை மாணவர்களின் ஆர்வத்தை அதிகரித்து, எதிர்காலத்திற்குத் தயாராக உதவுகின்றன.
இந்த முயற்சியானது லேடீஸ் சர்க்கிள் 85 தலைவர் கீர்த்தனா, திட்ட ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் கோவை மாநகராட்சி ஆதரவுடன் செயல்படுத்தப்பட்டது.
