ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரியில் 2006 – 2010 கல்வியாண்டில் பயின்ற முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நடைபெற்றது. கல்லூரி முதல்வர் சௌந்தர்ராஜன் மாணவர் சங்கம் ஆற்றிய பணிகளை விவரித்தார்.
எஸ்.என்.ஆர் சன்ஸ் அறக்கட்டளையின் இணை நிர்வாக அறங்காவலர் நரேந்திரன் விழாவின் சிறப்பு மலரை வெளியிட, தலைமை நிர்வாக அதிகாரி ராம்குமார் பெற்று கொண்டார்.
அமெரிக்கா, கனடா, ஆஸ்திரேலியா, சிங்கப்பூர் மற்றும் ஐரோப்பா உள்ளிட்ட வெளிநாடுகளில் பல முன்னணி நிறுவனங்களில் பணி புரிந்து வந்திருந்த சுமார் 150 பேர் குடும்பத்தினர்களுடன் கலந்து கொண்டு தங்கள் நினைவுகளை பகிர்ந்து கொண்டனர்.
கல்லூரி மாணவர்களுக்கு கல்வித்தொகை வழங்குவதற்காகவும், கல்வி ஆராய்ச்சி மற்றும் ஆய்வு கூடங்களில் பல்வேறு பயிற்சிகள் பெறுவதக்கு உறுதுணையாக மூன்று லட்சத்துக்கான காசோலையை முன்னாள் மாணவர்கள் வழங்கினர்.

முன்னாள் மாணவர்களில் சிறந்த தொழில்முனைவோராக விளங்குவோருக்கும், ஆசிரியர்களுக்கும் நினைவுப் பரிசுகள் வழங்கப்பட்டன. மாணவர்களின் வளர்ச்சிக்கு பல்வேறு வகையில் உறுதுணையாக இருந்த முன்னாள் மாணவர்கள் பலருக்கு பாராட்டும், விருதும் வழங்கப்பட்டது.
முன்னாள் மாணவர் சங்க தலைவர் வீணா, செயலாளர் செந்தில்கண்ணன், பொருளாளர் பெருமாள் மற்றும் கிருஷ்ண குமார், உறுப்பினர் லாவண்யா, வைஷ்ணவி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
