ஸ்ரீ நேரு மஹா வித்யாலயா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 33வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. கல்லூரியின் முதல்வர் சுப்பிரமணி கல்லூரி அறிக்கை வாசித்தார். சிறப்பு விருந்தினராக கோவை தி ஐ பவுண்டேஸன் மருத்துவமனை மருத்துவர் ராமமூர்த்தி கலந்துகொண்டு, மாணவர்களுக்கு பட்டங்கள் வழங்கினார்.
விழாவில் கோவை நல சங்கம் மற்றும் கல்லூரியின் தலைவர் மகாவீர் போத்ரா, செயலாளர் சுனில்குமார் நஹாடா, கல்லூரியின் துணைத்தலைவர் கமலேஷ் சி பாப்னா, துணைசெயலாளர் பரத்குமார் ஜெகமணி, உறுப்பினர் ரத்தன்சந்த் போத்ரா ஆகியோர் கலந்து கொண்டனர்.
பாரதியார் பல்கலைக்கழக அளவில் தரப்பட்டியலில் இடம்பெற்ற 39 மாணவர்களுக்கு பதக்கங்களும், சான்றிதழ்களும் வழங்கப்பட்டன. 950 மாணவர்களுக்கு பட்டங்களுக்கான சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
