நிர்மலா மகளிர் கல்லூரியின் நாட்டு நலப்பணித் திட்டத்தின் சார்பில் சர்தார் வல்லபாய் பட்டேல் 150 ஆம் ஆண்டு பிறந்தநாள் விழா வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது. இதனை முன்னிட்டு கவிதை, கட்டுரை, ஓவியப் போட்டி, கருத்தமர்வு, உறுதிமொழி எடுத்தல் போன்ற நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது. கல்லூரியின் செயலர் குழந்தை தெரஸ், கல்லூரியின் முதல்வர் மேரி பபியோலா ஆகியோர் நிகழ்ச்சிக்குத் தலைமை வகித்தனர்.

