கோவை ஈஷா யோக மையத்தில் சத்குரு வழிநடத்தும் ‘குருவின் மடியில்’ எனும் ஒரு நாள் தியான நிகழ்ச்சி, வரும் ஆகஸ்ட் 3ஆம் தேதி நடைபெற உள்ளது.

ஈஷா யோக வகுப்புகளில் ஷாம்பவி மஹாமுத்ரா பயிற்சி அல்லது 13-நாள் யோக நிகழ்ச்சியில் சூன்ய தியான பயிற்சி பெற்றவர்கள் பங்கு பெறலாம். ஷாம்பவி மஹாமுத்ரா பயிற்சி பெற்றவர்களில் 15 முதல் 25 வயதுக்கு உட்பட்ட இளைஞர்களுக்கு நிகழ்ச்சி முற்றிலும் இலவசமாக வழங்கப்படுகிறது.

கோவை ஈஷாவில் நடைபெறும் குருவின் மடியில் நிகழ்ச்சியில் நேரில் வந்து பங்குபெற இயலாதவர்களின் வசதிக்காக தமிழகத்தில் மட்டும் 112 இடங்களில் நேரலை நிகழ்ச்சியாக நடத்தப்பட உள்ளது. தமிழ் மக்கள் அதிகம் வசிக்கும் நாட்டின் பிற மாநிலங்களான கர்நாடகா, ஆந்திரா, கேரளா உள்ளிட்ட மாநிலங்களிலும், மலேஷியா, சிங்கப்பூர், ஆஸ்திரேலியாவில் உள்ளிட்ட நாடுகளிலும் குருவின் மடியில் நேரலை நிகழ்ச்சி நடைபெற உள்ளது. ஆஸ்திரேலியாவில் மெல்போர்ன், பெர்த், சிட்னி மற்றும் பிரிஸ்பேன் நகரங்களில் நேரலை நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

இந்நிகழ்ச்சியில் நேரடியாகவும், நேரலை செய்யப்பட உள்ள பிற இடங்களிலும் பங்கேற்பதற்காக இதுவரை 22,000-க்கும் அதிகமான மக்கள் முன் பதிவு செய்துள்ளனர். நிகழ்ச்சியில் பங்கு பெறுவதற்கு முன் பதிவு அவசியம். பங்கு பெற விரும்புவோர் sadhguru.co/guruvinmadiyil என்ற இணையதளத்தில் முன்பதிவு செய்து கொள்ளலாம். தகவல்களுக்கு 83000 99555 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.