கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா பாலிடெக்னிக் கல்லூரியின் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்வு அண்மையில் நடைபெற்றது.
இதில் கல்லூரி முதல்வர் கோபாலகிருஷ்ணன் தலைமை தாங்கினார். ஆசிரியர் இராயப்பராஜ் அனைவரையும் வரவேற்றார். இந்நிகழ்வில் கல்லூரியில் பயின்ற முன்னாள் மாணவரும், தூயதமிழ் இளைஞர் பாசறையின் நிறுவுனரும், தலைவருமான தமிழ் மணிகண்டனுக்கு பல்துறை சாதனைகளைப் பாராட்டி விழாவில் அவருக்கு “புகழ்மிக்க முன்னாள் மாணவர் விருது” வழங்கிச் சிறப்பிக்கப்பட்டது.
உடன் எஸ்.என்.எஸ். கல்லூரியின் பேராசிரியர் ஆளுமைத்திறன் பயிற்றுநர் ஜெகதீஷ்க்கும் விருது வழங்கப்பட்டது. விழாவில் அனைத்துத் துறைத் தலைவர்கள், ஆசிரியர்கள் மற்றும் கல்லூரியில் பயின்ற 500 க்கும் மேற்பட்ட முன்னாள் மாணவர்கள் கலந்து கொண்டுச் சிறப்பித்தனர்.