கோவை கே.ஜி.மருத்துவமனை மற்றும் டாக்டர் கே. சாந்தா மார்பகப் புற்றுநோய் அறக்கட்டளை இணைந்து இலவச மார்பக புற்றுநோய் பரிசோதனை முகாமை கணபதி பகுதியில் உள்ள கே.ஜி மருத்துவமனை வளாகத்தில் இன்று நடத்தியது. இதில் சிறப்பு விருந்தினர்களாகப் புற்றுநோய் அறுவை சிகிச்சை நிபுணர்கள் டாக்டர் ராஜகோபால் மற்றும் டாக்டர் கோவிந்தராஜன் ஆகியோர் கலந்துகொண்டனர். கே.ஜி. மருத்துவமனையின் தலைவர் டாக்டர் ஜி.பக்தவத்சலம் தலைமை தாங்கினார். இம்முகாமில் மொபைல் மேமோகிராபி பஸ் மூலம், மார்பகப் புற்றுநோயைக் கண்டறியும் சகிரீனிங் செய்யப்பட்டது. இதில், மகளிர்கள் பலர் பங்கேற்றுப் பயனடைந்தனர்.