கோவை கம்பன் கழகத்தின் 54ஆம் ஆண்டு கம்பன் விழா, பாப்பநாயக்கன்பாளையம் மணி மேல்நிலைப்பள்ளியில் வரும் பிப்ரவரி 7, 8ம் தேதியில் நடைபெற உள்ளது.
மாலை 5 மணிக்கு துவங்கும் முதல் நாள் நிகழ்வில், சென்னை உயர்நீதிமன்றம் நீதியரசர் சுரேஷ்குமார் தலைமை உரையாற்றுகிறார். மதுரை கம்பன் கழக தலைவர் சங்கர சீத்தாராமன் மலர் வெளியீட, சி.ஆர்.ஐ. பம்ஸ் நிறுவனங்கள் துணைத் தலைவர் சௌந்தரராஜன் பெற்றுகொள்கிறார். முனைவர் சொ. சொ. மீ. சுந்தரம் இலக்கியப் பேருரையாற்றுகிறார்.
காலை 11.30 மணிக்கு தொடங்கும் இரண்டாம் நாள் நிகழ்வில் சுழலும் சொல்லரங்கம், பொருள் தெறி அரங்கம், நாட்டிய நாடகம், பட்டிமண்டபம் உள்ளிட்ட நிகழ்வுகள் நடைபெறுகின்றன.
நிகழ்வில் கோவை கம்பன் கழகத்தின் தலைவர் பதி, துணைத் தலைவர்கள் சுனிதா சாந்தாராம், செல்வபதி, பாலசுந்தரம், பொருளாளர் ராசேந்திரன், செயலாளர் முருகேசன் உள்ளிட்ட நிர்வாகக்குழுவினர் பங்கேற்கின்றனர்.
