புது தில்லியில் உள்ள யஷோபூமி மாநாட்டு மையத்தில் நடைபெற்ற 2024 சஞ்சீவனி ஹெல்த்கேர் எக்ஸலன்ஸ் விருதுகள் நிகழ்வில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை “தெற்கு மண்டலத்தில் வேகமாக வளர்ந்து வரும் மிகச்சிறந்த மருத்துவமனை” என்ற பிரிவில் சஞ்சீவினி விருதைப் பெற்றது.

இந்த விருதை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையை நடத்தும் எஸ். என். ஆர் சன்ஸ் அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் ஆர்.சுந்தர், மருத்துவனை கண்காணிப்பாளர் டாக்டர் அழகப்பன் ஆகியோர் இனைந்து பெற்று கொண்டார்.

எஸ்சிபிசி எனும் மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகத்தின் கீழ் உள்ள சேவைகள் ஏற்றுமதி ஊக்குவிப்பு கவுன்சில் மற்றும் பி. டபிள்யு ஹெல்த் கேர் வேர்ல்ட் (BW Healthcare World) எனும் நிறுவனத்துடன் இணைந்து சஞ்சீவினி எனும் மருத்துவ கண்காட்சியை டெல்லியில் நடந்தது. இதன் ஒரு பகுதியாக ‘சஞ்சீவனி ஹெல்த்கேர் எக்ஸலன்ஸ் விருதுகள்’ வழங்கும் விழா நடைபெற்றது.

இந்த விழாவில், சுகாதாரத்துறை தலைவர்களின மாபெரும் கூட்டம் நடைபெற்றது, அவர்கள் அனைவரும் மருத்துவ சுற்றுலாவின் எதிர்காலம், உலகளாவிய மருத்துவ அணுகல் மற்றும் பிராந்தியங்கள் முழுவதும் மருத்துவ இடைவெளியைக் குறைப்பதில் மருத்துவமனைகளின் பங்கு குறித்து விவாதித்தனர் மற்றும் கருத்துக்களைப் பரிமாறிக்கொண்டனர்.

இந்த அமர்வின் முக்கிய பேச்சாளர் ஆர். சுந்தர், இந்தியாவிலும் உலகெங்கிலும் சுகாதாரத் துறை எதிர்கொள்ளும் சவால்களை பற்றி உரையாற்றினார்.