ரோட்டரி கிளப் ஆப் கோயம்புத்தூர் ஸ்மார்ட் சிட்டியின் சார்பில், 500 சிறப்புக் குழந்தைகள் பங்கேற்கும் ‘ஸ்மார்ட் ரன் மாரத்தான்’ நிகழ்வு ஞாயிற்றுக்கிழமை (23.02.2025) வஉசி மைதானத்தில் நடைபெற்றது.
இதில் சிறப்பு விருந்தினராக மாவட்ட காவல்துறை ஆணையர் சரவண சுந்தர் கலந்துகொண்டு கொடியசைத்து துவக்கி வைத்தார்.
மேலும் இந்நிகழ்வில் ரோட்டரி கிளப் ஆஃப் கோயம்புத்தூர் ஸ்மார்ட்சிட்டி தலைவர் நிதின் ஷா, செயலாளர் ஜெயஸ்ரீ கோட்டா, அமைப்பாளர் குழு மற்றும் உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.