-கேரளா நிலச்சரிவு எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள்

நம் அண்டை மாநில கேரள சகோதரர்களுக்கு துயர்மிகு நேரத்தில் உறுதுணையாக இருக்குமாறு விடியா திமுக அரசைக் கேட்டுக்கொள்கிறேன் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கேட்டுக்கொண்டுள்ளார்.

கேரளாவில் கொட்டி தீர்த்த கனமழையால் வயநாடு மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. இந்நிலையில், வயநாடு மாவட்டத்தில் உள்ள சூரல்மாலா என்ற பகுதியில் பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. நிலச்சரிவில் சிக்கி 36-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாகத் தகவல் வெளிவருகின்றன. 500-க்கும் மேற்பட்ட வீடுகளில் 1000க்கும் மேற்பட்டோர் சிக்கி இருப்பதாகவும், சிக்கியவர்களை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருவதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள பதிவில், ‘கேரள மாநிலம் வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 30-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாக வரும் செய்தி கேட்டு மிகுந்த துயருற்றேன். உயிரிழந்தோர் குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கல்.

மேலும், இந்நிலச்சரிவில் 400க்கும் மேற்பட்டோர் சிக்கியுள்ளதாகச் செய்திகள் வரும் நிலையில், அனைவரும் பாதுகாப்பாக மீட்கப்பட அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ள வேண்டுமெனக் கேரள அரசையும், மீட்புப் பணிகளில் கேரள மாநில அரசுக்குத் தேவைப்படும் அனைத்து உதவிகளையும் செய்துக் கொடுக்குமாறு மத்திய அரசை வலியுறுத்துகிறேன். நம் அண்டை மாநில சகோதரர்களுக்கு இத்தகு துயர்மிகு நேரத்தில் உறுதுணையாக இருக்குமாறு விடியா திமுக அரசைக் கேட்டுக்கொள்கிறேன்’ எனக் குறிப்