ரத்தினம் கல்லூரியில் உயர்நிலை படிப்புகள் ஆன எம். பி.ஏ மற்றும் பி. ஆர்க் முதலாமாண்டு மாணவர்களுக்கான வரவேற்பு விழா அனுக்கிரகா என்ற பெயரில் நடைபெற்றது.

விழாவில் ரத்தினம் குழும நிறுவனத்தின் தலைவர் மதன் ஏ செந்தில் தனது முன் அனுபவங்களையும், வாழ்க்கையின் வெற்றிப் பயணத்தை யும் பகிர்ந்துள்ளார். பின்னர் மாணவர்களுக்கு எழுச்சியூட்டும் வகையில் தொழில் மற்றும் தொழில்சார் அமைப்பது குறித்து உரைமாடினார்.

முதன்மை விருந்தினராக டாக்டர் கே. அண்ணாமலை நிர்வாக இயக்குனர் அண்ணாமலை கேபிடல் சர்வீசஸ் (பி) லிமிடேட் மற்றும் ரத்தினம் கல்வி குழுமங்களின் நிர்வாகத் துணைத் தலைவர் நாகராஜ், ரத்தினம் கோவில்பாளையம் வளாகத்தின் தலைவர் குண சேகரன், முதல்வர் பிரவீன் சந்திரா, செந்தில் வேல் குமார் பேராசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் திரளாக பங்கேற்றனர்.