–       என்.ஜி.பி. பள்ளி விளையாட்டு விழாவில் Dr.நல்ல.ஜி. பழனிசாமி பேச்சு

மாணவர்கள் நன்றாக படித்து, நன்றாக விளையாடி, நல்ல உணவை உட்கொண்டு ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என என்.ஜி.பி. ஆராய்ச்சி மற்றும் கல்வி அறக்கட்டளையின் தலைவர் Dr.நல்ல. ஜி. பழனிசாமி பேசினார்.

என்.ஜி.பி. பள்ளியின் ஆண்டு  பள்ளி விளையாட்டு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. நிகழ்விற்கு என்.ஜி.பி. ஆராய்ச்சி மற்றும் கல்வி அறக்கட்டளையின் தலைவர் Dr.நல்ல ஜி. பழனிசாமி தலைமை வகித்து, தேசிய கொடி, ஒலிம்பிக் கொடியை ஏற்றி வைத்து மாணவர்களின் மரியாதை அணிவகுப்பை ஏற்றுக் கொண்டு விழாவை துவக்கி வைத்தார்.

தொடர்ந்து அவர் பேசுகையில்,”விளையாட்டு போட்டி என்பது அனைவரும் பங்குபெற வேண்டிய ஒன்று. தினமும் ஒரு மணி நேரம் விளையாட வேண்டியது அவசியம். விளையாட்டை ஊக்கவிக்கும் வகையில் உலக அளவில் பாரிஸ் ஒலிம்பிக் போட்டி 2024 தொடங்கியது. அது போன்று,  என்.ஜி.பி. மாணவர்கள் விளையாட்டில் அதிக கவனம் செலுத்தி உலகளவில் வெற்றி பெற செய்ய எனது வாழ்த்துக்கள்.

விளையாட்டு போட்டி பொறுத்தவரையில் தோல்வி என்பது முடிவாக இருக்காது, அதுவே வெற்றியின் துவக்கம் ஆகும். வாய்ப்புகள் கிடைக்கும் போதெல்லாம்  போட்டியில் பங்கு பெற்று திறனை வெளிப்படுத்த வேண்டும். அதற்கு பெற்றோர்களும் உறுதுணையாக இருக்க வேண்டும். மேலும், மாணவர்கள் அனைவரும் நன்றாக படித்து, ஆரோக்கியமான உணவை உட்கொண்டு, நன்றாக விளையாட வேண்டும்”  என்றார்.

பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசுகளும், சான்றிதழ்களும்  வழங்கப்பட்டன. இதில் பள்ளி தாளாளர் தவமணி தேவி பழனிசாமி, செயல் இயக்குநர் மதுரா பழனிசாமி, பள்ளி முதல்வர் பிரீதா பிரகாஷ், பெற்றோர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.