அரசினர் மகளிர் கல்லூரியில் 15 வகுப்பறைகள், 10 ஆய்வகங்கள் திறந்து வைத்தார் முதல்வர் ஸ்டாலின்
கோவை அரசினர் மகளிர் பல்தொழில்நுட்ப கல்லூரியில், பெருந்தலைவர் காமராஜர் கல்லூரி மேம்பாட்டுத் திட்டத்தின்கீழ், உயர்கல்வித் துறை சார்பில் 15 வகுப்பறைகள், 10 ஆய்வகங்களுக்கான கட்டடங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து, காணொளிக் காட்சி வாயிலாகத் திறந்து வைத்தார்.
கல்லூரி முதல்வர் ராஜேந்திரன், எக்ஸிகியூட்டிவ் திருநாவுக்கரசு, துணை முதல்வர் கண்ணகி மற்றும் கல்லூரி துறைத் தலைவர்கள், பொதுப்பணித் துறை பொறியாளர் வித்யா ராமநாதன், மற்றும் ஆசிரியர்கள், மாணவிகள் கலந்துகொண்டனர்.
அரசினர் மகளிர் பல்தொழில்நுட்பக் கல்லூரியில் புதியக் கட்டடத் திறப்பு விழா நிகழ்ச்சியில் கோவை மாநகர் மாவட்ட திமுக செயலாளர் நா.கார்த்திக் (முன்னாள் எம்.எல்.ஏ.,). உடன், கல்லூரி முதல்வர் ராஜேந்திரன் உள்ளிட்டோர்.