கோவை, பீளமேட்டில் 114.16 கோடி மதிப்பீட்டில், சுமார் 3,200 க்கும் மேற்பட்ட இளைஞர்களுக்கு ‌வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் கட்டப்பட்டுள்ள, புதிய தகவல் தொழில்நுட்ப பூங்கா கட்டிடத்தை, வரும் 5.11.2024 அன்று, தமிழ்நாடு முதலமைச்சர் கழகத் தலைவர் திறந்து வைக்க உள்ளதை முன்னிட்டு, அந்த இடத்தை, தமிழ்நாடு மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி வெள்ளிக்கிழமை (1-11-2024) பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

20241101 145237

இதில் கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார், காவல் ஆணையாளர் பாலகிருஷ்ணன், மாநகராட்சி ஆணையாளர் சிவகுரு பிரபாகரன்,  கோவை மாநகர் மாவட்ட திமுக செயலாளர் நா.கார்த்திக், வடக்கு மாவட்டச் செயலாளர் தொ.அ.ரவி, தெற்கு மாவட்டச் செயலாளர் தளபதி முருகேசன், மாநகராட்சி மேயர் இரங்கநாயகி, வடக்கு மாவட்ட துணைச் செயலாளர் அசோக் ஆறுக்குட்டி, துணை மேயர் இரா.வெற்றிச்செல்வன், கழக நிர்வாகிகள் உடனிருந்தனர்.